சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு நந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை. இதனால் நந்தினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாகயிருந்த நந்தினி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் திருமணமான ஓராண்டிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் கோட்டைக்குமாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.