மரக்காணம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன்.. இவருக்கு 24 வயதாகிறது.. கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.. அப்போது அவருடைய தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது..
இதனால் மனவேதனையடைந்த பரதன் வீட்டிற்கு அருகேயுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பரதன் பூச்சி மருந்தையும் சாப்பிட்டுள்ளார்.. அதனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.