புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காமராஜபுரம் சென்ற போலீசார் அந்த வீட்டிலிருந்து 7,16,000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, அங்கிருந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய ஸ்கேனர், பிரிண்டர் போன்ற உபகரணங்கள் மற்றும் கூட்டாளிகளின் காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜெயராஜ் கும்பலை கைதுசெய்த போலீசார், அந்த கும்பல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.