சென்னை ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக வேப்பேரி போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல்(23) மற்றும் விக்னேஷ்(18) என்பது தெரியவந்தது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது நண்பரான கௌதம் என்ற இளைஞருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் ஒரு பெரிய கேக்கை வாங்கி, அதனை கத்தி மூலம் வெட்டியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்கள் கேக் வெட்ட பயன்படுத்திய பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது எந்த வித குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.