போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை சூப்பிரண்டு கலைவண்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் விதமாக காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னசாமி நாயுடு பகுதிகளில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அப்புறவுபடுத்தும் போது காவல்துறையினருக்கும், வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுக்கு வணிகர் சங்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இம்மாவட்டத்தில் நகர் புறங்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து காவல்துறை சூப்பிரண்டு கலைவண்ணன் பொன்னகரம் ரோடு, 4 ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு மற்றும் சின்னசாமி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து நெரிசல்களை தடுபதற்கு எந்தந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களை எந்தெந்த பகுதிகளில் நிறுத்த வேண்டும் எனவும் மற்றும் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது குறித்தும் காவல்துறையினருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.