பணியில் இருந்த அதிகாரியை கொலை மிரட்டல் செய்த 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்தில் ராம்கி என்பவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் இருந்து தன்னுடைய காரில் தியாகதுருகம் பகுதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் சென்று கொண்டிருக்கும் போது பழைய சிறுவங்கூர் கிராமப்புறத்தில் பிரச்சனை நடப்பதாக அங்கே செல்லுமாறு இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி ராம்கி காரின் மூலமாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அரக்கோணம் சாலை பகுதியில் வந்த போது அவர் மேலும் செல்ல வழி தெரியாமல் நின்றுள்ளார்.
அதன்பின் ராம்கி ராமநாதபுரம் பிரிவு சாலை அருகாமையில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த 2 பேரிடம் பழையனூர் கிராமத்திற்கு எப்படி செல்ல என வழி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ராம்கியிடம் ஆபாச வார்த்தைகள் பேசி திட்டி முகத்தில் கையால் குத்தியுள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து அவர்கள் ராம்கியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகின்ற தென்னரசு, சங்கர் என்பது அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.