சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வெங்கடேசன் பணி நிமித்தமாக ஆந்திராவுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டில் அடைத்து வைத்திருந்த சிறுமியை அவரது வீட்டுக்குச் செல்லும்படி அவர் அனுப்பி வைத்து விட்டு சென்றுள்ளார்.. பின்னர் சிறுமி வெளியே சுற்றிக்கொண்டிருந்ததை கண்ட மற்றொரு நபர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், சிறுமி மீண்டும் அங்கிருந்து தப்பித்து திருத்தணி இரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி சுற்றித் திரிந்துள்ளார்.
இதனைப் பார்த்த ரயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, அயனாவரம் பகுதியில் வசித்துவருவதாக கூறியுள்ளார்.. இதனையடுத்து அயனாவரம் போலீசாரை தொடர்பு கொண்டு சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் பின்னர் பாட்டியிடம் சிறுமி அனுப்பிவைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.