மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் அளவிற்குப் பணம் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றிவந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்து போன ராமச்சந்திரன் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.. அந்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிக்டாக் மூலம் பண மோசடி செய்த சுசி என்ற பெண்ணை வலைவீசித் தேடிவருகின்றனர்.