Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு… தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர்… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

ஆற்றின் கரையிலிருந்து ஆட்டோவில் மணல் கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை அடுத்து அந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தி வந்த ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |