Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து ஆன பெண் பேசிக்கொண்டிருந்த போது… திடீரென கட் ஆன அழைப்பு… பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தான் ரிடா மஸ்ரூர் சவுத்ரி (Rida Masroor Chaudhary). வங்கி மேலாளராக இருந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பின் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தன்னுடைய சகோதரி தரன்னம்  (Tarannum) என்பவருடன் வீடியோ அழைப்பின் மூலம் ரிடா பேசி கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மிகுந்த மன வருத்தத்தில் பேசிக்கொண்டிருந்த ரிடாவின் அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. பின்னர் சகோதரி மற்றும் குடும்பத்தினர்  ரிடாவின் வீட்டுக்கு வந்த போது அவர் சடலமாக கிடந்தார்.. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் அங்கு வந்து சடலத்தை மீட்டனர்.. அப்போது ரிடாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதாவது, ரிடாவுக்கு ஹபிப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணமாகவில்லை என்று ஹிபிப் கூறிய நிலையில் அவரை திருமணம் செய்ய ரிடா விரும்பினார்.. இந்த சூழலில் ஹபிப்புக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் ரிடாவுக்கு தெரியவர,  அதிர்ச்சியடைந்த அவர் அவருடன் பழகுவதை முற்றிலுமாக நிறுத்தினார்.

ஆனால் ஹபிப் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் ரிடாவை ஹபிப் கொலை செய்துள்ளார்.. இதை தொடர்ந்து அவரை கொலை செய்த ஹபிப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் சிக்கிய பின்தான் இந்த சம்பவத்தில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |