Categories
மாநில செய்திகள்

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோவின் ஒட்டுனரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பல்லவி என்பவர் சென்னை போருரில் உள்ள தனியார் மருந்துக்கடையில் பணியாற்றிவருகிறார். இவர், நேற்று இரவு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்குச் செல்ல, ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஆட்டோவின் ஒட்டுனர் இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டு, அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து தப்ப முயன்றுள்ளார். பெண்ணின் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் அங்கு வருவதை அறிந்த ஆட்டோ ஒட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து பல்லவியை காப்பாற்றிய பொதுமக்கள் நடந்தவற்றை விசாரித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று பல்லவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ள பெரியமேடு காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஒட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |