கல்லூரிக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால் எடுத்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தேனி மாவட்டம் உத்தமம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மகள் சங்கீதா, உத்தமபாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் சங்கீதா. இரவு வெகு நேரம் ஆகியும் சங்கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் சங்கீதாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் சங்கீதா கிடைக்காத நிலையில் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். தங்கவேல் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு காணாமல்போன சங்கீதாவை தேடிவருகின்றனர்.