Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… வயது முதிர்ந்த தம்பதியினருக்கு நடந்த கொடூரம்… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியான சுலோச்சனா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இந்நிலையில் இவர்களின் மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் வெளி ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனால் கிருஷ்ணன் மற்றும் சுலோச்சனா ஆகிய இருவரும் தங்களின் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 12-ஆம் தேதி இரவு நேரத்தில் கிருஷ்ணன் மற்றும் சுலோசனா ஆகிய தம்பதியினரை மர்ம நபர் படுகொலை செய்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதில் இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து வயதான தம்பதியை படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து அவர்களைத் தேட காவல்துறை சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வயதான தம்பதியினரை படுகொலை செய்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், பின்னர் வயது முதிர்ந்த தம்பத்தினரை கொலை செய்ததற்கான காரணம் பற்றி தெரிய வரும் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |