ஆளில்லா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் நல்லையா – செல்லத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தம்பதியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 2½ பவுன் தங்க நகை மற்றும் 10000 ரூபாய் பணம் போன்றவை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து இந்த தம்பதியினர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.