உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை கடந்த 7ஆம் தேதி (சனிக்கிழமை), அவர் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வருவாய் அலுவலர் சுஷி பட்டேல் என்பவர் உட்பட 3 பேர் கடத்த முயன்று அவர்கள் வந்த காரில் ஏற்றினர். அப்போது தடுக்க வந்த அப்பெண்ணின் தாயாரையும் தள்ளிவிட்டு அந்தப் பெண்ணை கடத்திச்சென்றனர்.
அதனைத்தொடர்ந்து அந்தபெண்ணை ஓடும் காரில் வைத்து 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஓடும் காரிலிருந்து அந்தப் பெண் தப்ப முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவாய் அலுவலர் உள்பட 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.