Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டை சுற்றிய போலீஸ் ….. கைதாகும் சீமான் …… பரபரப்பில் அரசியல் களம் …!!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசிய சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சென்னையில் அவரின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.மேலும் இதுதொடர்பாக சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய பட்டது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் , அவர் விதிமுறைக்கு புறம்பாக பேசியதாக புகார் அளித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும். சீமானை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை எழுந்து வருகின்றது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று அவர்   நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் மேலும் சீமானை கைது செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

Categories

Tech |