காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது ஒரு கைத்துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்கு போடுவதற்கு முன்பாகவே அவர்கள் இந்த விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததற்கான காரணம் காவல்துறையினருக்கு தெரியவில்லை. எனவே இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த பிறகு அவர்கள் அது பொம்மை துப்பாக்கி என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.