தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில் அந்த ஏடிஎம்க்கு கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார்.
கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி ரூ 8,000 பணத்தை நைசாக எடுத்து விட்டு ஏடிஎம்-மில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பணம் பறிபோனதை தாமதமாக உணர்ந்த விவசாயி வேல்முருகன் போடி நகர காவல் துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வந்த காவல்துறையினர் சிசிடி காட்சிகளை ஆராய்ந்து பார்த்து கல்லூரி மாணவர் ராஜ்குமாரை கைது செய்தனர்.