சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேரகுளம், குளத்தூர், முத்தையாபுரம், கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் போன்ற பகுதிகளில் மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 11 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 84 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.