Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா….? வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ராமசாமி, கார்த்திக் மற்றும் அஜித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |