Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நா சொன்னத செய்யுங்க… கையும் களவுமாக பிடிபட்டவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்துக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றி தருமாறு விண்ணப்பித்துள்ளார். அதற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாயின் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மோகனப்பிரியா கூறியுள்ளார்.

இதனை அடுத்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் மூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டது குறித்து புகார் அளித்து விட்டார். அதன்படி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற மூர்த்தி போலீசாரின் ஆலோசனைப்படி லஞ்ச பணத்தை மோகனப்பிரியாவிடம் கொடுத்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியாவை கையும் களவுமாக அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் கார்த்திகேயன் போன்றோர் பிடித்து கைது செய்து விட்டனர்.

Categories

Tech |