தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்த ரூபாய் 620 மற்றும் லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.