செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ராமர் அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ராமரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ராமர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலக்கரை பகுதியில் வசித்து வரும் டேவிட் என்ற வாலிபரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.