Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கரெக்டான டைம்கு போயிட்டாங்க…. கையும் களவுமாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பிகளை திருட முயற்சி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றை உடைத்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பியை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்ததை பார்த்தனர்.

இதனையடுத்து இரும்பு கம்பியை திருட முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன் மற்றும் காளிராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |