Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த வேலை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கோகுல்ராஜ் மற்றும் மன்சூர் அலி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |