Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்பி கடன் கொடுத்தேன்…! 20லட்சம் வந்துட்டு…. கொன்னுடுவேன்னு சொல்லுறீங்க… கடமையை செய்த சட்டம் …!!

ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு,  பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் வாங்கிய பாவு நூலின் கணக்கானது 20 லட்சம் ரூபாயை எட்டியது.

இந்நிலையில் இவர்கள் தரவேண்டிய பணத்தை தருமாறு செந்தில்குமார் இருவரிடம் கேட்டபோது, அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதோடு அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து செந்தில்குமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து தனபால் மற்றும் ராஜேஷின் மீது பணத்தை மோசடி செய்வதற்காகவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றதிற்காகவும் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |