Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்….. மடக்கி பிடித்த காவல்துறையினர்….. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி காவல்துறையினர் புதூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் இரண்டு பேரை மடக்கி பிடித்து விட்டனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது ஏர்கன் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி அவர்களிடம் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ஊஞ்சல் பாளையம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பதும், மற்றொருவர் பல்லடத்தில் வசிக்கும் அஜித் பாண்டியன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இரவு நேரங்களில் வெளியே வருபவர்களை வழிமறித்து மிரட்டி பணம் பறிப்பதற்காக துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ், பாண்டியன் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |