பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் தர்மபுரியை சேர்ந்த விஜய் என்பதும் மற்றொருவர் பெரம்பலூரை சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்துள்ளது மேலும் இக்கொள்ளை சம்பவத்திற்கு மூளை காரணமாக செயல்பட்ட பூமிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.