Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயன்பாட்டுக்கு வராத பூங்கா…. வாலிபர்களின் அட்டூழியம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பூங்காவில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

திருச்சி மாநகராட்சி சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 1 வருடத்திற்கு முன்பு நவீன முறையில் திரவியம் பிள்ளை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்காவை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த பூங்காவில் எந்த நேரமும் வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் அந்த பூங்காவில் எங்கு பார்த்தாலும் காலியான மதுபாட்டில்கள் கிடைக்கிறது.

மேலும் பூங்காவில் இருக்கும் மின் விளக்குகள், இருக்கைகள் உடைந்து கிடந்துள்ளது. இதனையடுத்து பூங்காவில் திடீரென சோதனையில் ஈடுபட்ட திருச்சி கோட்டை காவல்துறையினர் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வாலிபர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். எனவே திரவியம் பிள்ளை பூங்காவை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |