சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.