தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து, 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்துள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சுவதாக சேர்ந்தமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உடனடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சாம்பவர்வடகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரும் கடையாலுருட்டியை சேர்ந்த சாமிசங்கர் (55), மயில்ராஜ் (வயது 40), ஆகிய 3 பேரும் இணைந்து சாராயம் காய்ச்சியது உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 70 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து உள்ளனர்.