கோவை அடுத்த போத்தனூர் அருகேயிருக்கும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயது முதியவரான முகமது பீர் பாஷா என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு ஓகே வா” என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் முதியவரை கண்டித்துள்ளனர்.
ஆனால், அந்த முதியவர் அடங்கவில்லை.. மீண்டும் சிறுமியை காதல் கண்ணோட்டத்தில் பார்த்து வம்பிழுத்துள்ளார். இது குறித்து மீண்டும் அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்து போன சிறுமியின் பெற்றோர் கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் முதியவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்..இதையடுத்து கைது செய்யப்பட்ட முதியவர் முகமது பீர் பாஷா சிறையிலடைக்கப்பட்டார்.