Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தான் ஒரு வங்கி அலுவலர்… ரூ 2 லட்சம் பணம், 6 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது..!!

வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய நகைகள் குறைந்த விலைக்கு ஏலத்திற்கு வருவதாகவும் கார்த்திக்கிடம் கூறி, கடந்த மார்ச் 23ஆம் தேதி 2 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடமிருந்து பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 6 பவுன் தங்க நகைகளையும் அவரிடமிருந்து ஏமாற்றி வாங்கியுள்ளார்.. அவற்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து, சோனியா தலைமறைவாகிவிட்டார்.. இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக கார்த்திக் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்நிலையில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் வைத்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

Categories

Tech |