சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மற்றும் ஜெய கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.