கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார் அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் சூதாடிய குற்றத்திற்காக போலீசார் அவர்கள் பத்து பேரின் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.