பிரிட்டனில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வசிக்கும் 33 வயது பெண் Sarah Everard. இவர் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அன்று தன் குடியிருப்புக்கு சென்ற போது திடீரென்று காணாமல் போனார். அதன் பின்பு வன பகுதியில், அவரின் உடல் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து Wayne Couzens என்ற காவல் அதிகாரி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே விசாரணை அதிகாரிகள் அவர் மீது கண் வைக்க தொடங்கினர்.
தற்போது அந்தப் பெண்ணை அவர் தான் கொலை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, பல கதைகளை கூறி ஏமாற்றினார். இறுதியாக உண்மையை கூறிவிட்டார். இன்று நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.
அப்போது, அந்த பெண்ணை கடத்தி, வன்கொடுமை செய்து, கொன்றதாக தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியதையெல்லாம், Sarahவின் தந்தை மற்றும் சகோதரி கேட்டுக்கொண்டிருந்த கொடுமை நடந்துள்ளது.