Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… பெண்கள் இப்படி பண்ணலாமா…? கைது செய்த போலீஸ்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த  குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் பூமிக்கடியில் 1800 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதனைக் கைப்பற்றி பின்னர் அழித்தனர்.

இதனையடுத்து மோத்தகல் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ், வேப்பூர் செக்கடி பகுதியில் வசித்து வரும் அலமேலு,  தட்டரணை கிராமத்தில் வசித்து வரும் அமுதா கல்யாணி மற்றும் சித்ரா ஆகிய 5 பேரை சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

Categories

Tech |