பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதன் படி பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளான சுதாகர், மதிவாணன், தட்சிணாமூர்த்தி, புருஷோத்தமன் போன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவரை தொடர்ந்து இம்மாவட்டம் மேல் சிறு கிராமம் மற்றும் குளக்கரை பகுதியில் வசிக்கும் காந்தி என்ற டேவிட் என்பவரையும் பாலுசெட்டி சத்திரம் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.