புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய போலீசார் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக, உத்தரபிரதேச மாநிலம் காசர்கோடு பகுதியில் வசித்து வரும் அகிலேஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பறிமுதல் செய்து விட்டனர், மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.