மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.
இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை கேட்டபோது அவர்கள் லஞ்சம் கேட்டதோடு எனக்கு ஆவணங்களையும் தர மறுத்து விட்டனர். இதேபோன்று பலருக்கும் நடப்பதால் வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக 3 வார காலத்திற்குள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணையை 3 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.