அதிகாரியை தாக்க முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் பெண் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் உரிய ஆவணங்களை காண்பிக்கவில்லை.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அண்ணாமலை மற்றும் தீர்த்தம் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்ட போது இருவரும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.