ஊரடங்கு அமலில் இருப்பதால் விதிமீறி செயல்படுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அலை மோதியுள்ளது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியபோது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய 42 இடங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் ஆந்திரா கர்நாடகா எல்லைப் பகுதியான 14 இடங்களில் 24 மணி நேரமும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மைக் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனம் 18 மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊரடங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் . அதன்பின் அத்தியாவசிய தேவை இன்றி இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பொதுமக்கள் அரசு நெறிப்படுத்தியுள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு தர வேண்டுமென போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியுள்ளார்.