Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண கூடாது… ஊழியரை தாக்கிய போலீஸ்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

இரவு 10 மணிக்கு மேல் கடை திறந்து வைத்ததால் பேக்கரி கடை ஊழியரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்வதாக கூறி தனியார் உணவகத்தில் பணிபுரிந்த கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இந்நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இதனால் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்துபாலம் பகுதியில் உள்ள பேக்கரியை இரவு 10 மணிக்கு மேல் திறந்து வைத்ததால் போலீசார் ஊழியரை தாக்கி அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |