கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சதீஷின் பெற்றோர்கள் காவல்துறை குறித்து புகார் அளிக்க திட்டமிட்டனர். மேலும் காவல் துறையினரிடம் இது குறித்து கேட்டறிந்த பொழுது அவர்கள் இவ்வாறு கூறினர். அதில், பள்ளி முதல்வரின் அனுமதியோடு தான் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கினோம் என்று பதிலளித்துள்ளனர். காவல்துறையினர் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது./