Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவி சொன்ன உடனே… துரத்தி பிடித்த காவல் அதிகாரி… சென்னையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவியிடம் 1 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரத்தி சென்று பிடித்து விட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் பகுதியில் ஸ்வேதா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சேலம் செல்வதற்காக விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். இவர்கள் பரங்கிமலை சிமெண்ட் சாலை பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஸ்வேதாவின் கையில் வைத்திருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் ஜோசப் என்பவரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதனை அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய வாலிபர்களை விரட்டி சென்றுள்ளார். அதன்பின் தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகில் சப்-இன்ஸ்பெக்டர் ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்த உடன், மற்றொருவர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மற்றொருவர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் சாமுவேல் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் பரங்கிமலை காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாமுவேல் மற்றும் பார்த்திபன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் பறித்துச் சென்ற செல்போனை பறிமுதல் செய்து அந்த மாணவியிடம் ஒப்படைத்து விட்டனர். இவ்வாறு சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் கொள்ளையர்களை விரட்டி சென்று பிடித்ததால் உயர் அதிகாரிகள் அவரை பாராட்டி உள்ளனர்.

Categories

Tech |