Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களை மாதிரி தான் இருக்கணும்… சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்… பாராட்டிய கமிஷ்னர்…!!

போலீஸ் கமிஷனர் கஞ்சா கும்பலைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜேக்கப், ஜெய்சங்கர் போன்றோர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து விட்டனர்.

அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் ஞானசேகர், பெர்னார்டு என்பதும், அவர்கள் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு  தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் ஞானசேகர், பெர்னார்டு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து போலீஸ் கமிஷனர் தீபக். எம்.தாமோர் சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்திய கும்பலைப் பிடித்த காவல்துறையினரை  பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

Categories

Tech |