Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…?? பெண் போலீசார் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த இரண்டு மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சரண்யாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், மேலும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தாயார் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது கதவு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் கதவை திறந்து பார்த்தபோது, சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |