விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் விதிக்கப்படும் என்றும், தவறான தகவல்களை தருபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கவனிக்க போலீசார் குறிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை சமாளிப்பதற்கும் 60 மில்லியன் பவுண்ட் நிதி போலீஸ் படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரீத்தி பட்டேல் கூறியுள்ளார்.