Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 25 முட்டைகள்…. தப்பி ஓடிய கும்பல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 1/2 டன் நியாய விலை கடையின் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட முழுவதுமாக அரிசி கடத்தல் மற்றும் அரிசி கடத்தல் போன்ற தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நியாய விலை கடையில் இருந்து அரிசி கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்போது தனிபிரிவு காவல்துறையினர் செட்டியப்பணுர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதில் காரில் அரிசி மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தவர்கள் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சென்று அந்த காரை சோதனை செய்துள்ளனர். அதில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக 25 மூட்டைகளில் 1 1/2 டன் நியாய விலைக் கடையின் அரிசிகள் ஏற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நியாய விலைக் கடையின் அரிசியையும் மற்றும் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி சென்ற அரிசி கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |