அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் 222 வாகனங்ககளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து காவல்துறையினர்கள் சாலைகளில் தடுப்பு அமைத்து அந்த வழியாக வருகின்ற வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களின் 222 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த வழியில் முகக்கவசம் அணியாமல் வந்த 160 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.